முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜல்லிக்கட்டு நடத்த அரசு தேதி அறிவித்த பிறகே வீரர்கள் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: உதவி ஆணையர் எச்சரிக்கை

அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே காவல்துறையின் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று திருப்பரங்குன்ற உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட அவனியாபுரம் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அப்பகுதி இளைஞர்கள் பொதுஇடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிப்பதில் ஏற்பட்ட தகராறில் கோஷ்டி மோதலில் 2 வாலிபர்களுக்கு தலையில் அரிவாள் வெட்டு ஏற்பட்டு பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில். இதுகுறித்து திருப்பரங்குன்ற சரக உதவி ஆணையர் சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.

’பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தேதி அறிவிக்கப்படும் போது மட்டுமே காவல்துறையின் உரிய அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவனியாபுரம் பகுதியில் உள்ள பொது இடங்களில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பயிற்சி செய்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறி செயல்படுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜல்லிக்கட்டு காளைகளை பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சம்பவம் நடந்த அவனியாபுரம் பகுதிகளில் போலீசார் ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து தெருத்தெருவாக சென்று ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், மாடுபிடி வீரர்கள் என அனைவருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு செய்து வருகின்றனர். காவல்துறையினருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்து அமைதி உருவாக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று உதவி காவல் ஆணையர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.

Advertisement:

Related posts

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா இருக்கிறது: பிரதமர் மோடி

Ezhilarasan

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கண்டனம்!

Halley karthi

கொரோனா தடுப்பூசி : சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது

Niruban Chakkaaravarthi