முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா 2வது அலை பரவல் காரணமாக, 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காக, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு மதிப்பெண்களை, விகிதாச்சார அடிப்படையில் வழங்க பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வு மதிப்பெண்கள் வழங்கும் பணியை, பள்ளிகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறைச் செயலாளர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு மற்றும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை குறித்தும், ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.







