அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக தற்போது தமிழ்நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரவும் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் எண்ணெய் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவ்வழக்கு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய கொரோனா சூழ்நிலையில் மாஸ்க், சானிடைசர் போன்ற பொருள்களின் விலையை நிர்ணயம் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட துறையின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என கைவிரித்த நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனு அளித்து நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என மனுதாரருக்கு அறிவுறுத்தினர்.