மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர் காந்தி!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு,  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி நிவாரண பொருட்களை வழங்கினார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.  பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்: மிரட்டிய மிக்ஜாம் புயல் | தத்தளிக்கும் வட சென்னை!

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம்,  பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருபாலைவனம்,  மெதூர் மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட 600 குடும்பங்களுக்கு தேவையான அரிசி,  பருப்பு,  போர்வை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இதனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர் முன்னிலையில்  வழங்கினார்.  இதில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார்,  கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர்.டி.ஜெ. கோவிந்தராஜன்,  பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.