சென்னையில் கடந்த சில நாட்களாக சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தொடர் போாராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று 8 வது நாளாக சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து 15 மேற்பட்ட மாநகர பேருந்தில் ஏற்றினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது. இந்தப் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் காவல்துறை வழங்கும் உணவை புறக்கணிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபவர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் போக்குவரத்துக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.







