தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இதையும் படியுங்கள்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: நடிகர்கள் சூரி, அருண் விஜய், இயக்குநர் ஏ.எல்.விஜய் பார்வையிட்டனர்!
“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார். அவரது சமூகநீதி சிந்தனை கொண்ட படங்கள், திரையை தாண்டி மக்கள் மனதை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்களின் நலம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.







