கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 2000 மரக்கன்றுகள் நடும் திட்டம்!

சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை…

சென்னை கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில், கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, 2000 கனி தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தை அடுத்த குன்னத்தூர் ஊராட்சியில் உள்ள சூராத்தம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 10 ஏக்கர் நிலத்தில் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்பட்டது. ஊராட்சி நிர்வாகம் சார்பில் அந்த மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் மா, பலா, தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை மற்றும் துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோர்களது ஏற்பாட்டில் நடைபெற்றது. இவ்விழாவில், அ.தி.மு.க செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வந்தராவ் ஆகியோர் கலந்து கொண்டு மரங்களை நட்டனர்.

—-சௌம்யா.மோ

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.