ஆரணி காமக்கூர் அமிர்தாம்பிகை சமேத சந்திரசேகர சுவாமி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத சுயம்பு சந்திரசேகர சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இங்கு பங்குனி மாதம் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. அதன்படி கடந்த மாதம் 25-ம் தேதி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உள்ள பல்லக்கில் அம்பாள் அமிர்தாம்பிகை மற்றும் சந்திரசேகர சுவாமி அலங்கரிக்கப்பட்டு தேரில் அமர வைத்து பக்தர்கள் காமக்கூர் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக பவானி வந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்தினர்.
—அனகா காளமேகன்







