நெல்லை மாவட்டம் , வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில் பெய்த
கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள்
மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் கடுமையாக சுட்டெரித்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் , வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தில்
வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பெய்த கனமழையால்
தெருக்களில் வெள்ளம் ஆறாக ஓடியது.
மேலும், அரை மணி நேரம் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து
குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதேபோல் பணகுடி மற்றும் வள்ளியூர்
பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் விவசாய, வியாபார மற்றும்
பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
—கு.பாலமுருகன்







