ரூ.2.35 கோடியில் வந்துவிட்டது மெர்சிடிஸ் பென்ஸ்-ன் புதிய கார்!

மெர்சிடிஸ் பென்ஸ் ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய கார் ஒன்றை இந்திய மார்க்கெட்டில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.  சினிமா நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் கார்கள் வாங்க வேண்டும் என்று யோசித்தால்…

மெர்சிடிஸ் பென்ஸ் ரூ.2.35 கோடி மதிப்பில் புதிய கார் ஒன்றை இந்திய மார்க்கெட்டில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

சினிமா நட்சத்திரங்கள், பெரும் தொழில் அதிபர்கள் மற்றும் பெரும் பணக்காரர்கள் கார்கள் வாங்க வேண்டும் என்று யோசித்தால் அவர்களின் முதல் தேர்வு பென்ஸ் கார்களாக தான் இருக்கிறது. அதற்கு காரணம் காலத்திற்கு ஏற்ப புதுவித மாற்றங்களுடன் சகல வசதிகள் மற்றும் சகல பாதுகாப்பு அம்சங்களுடன் அந்த கார்கள் சந்தைப்படுத்தப்படுவதே காரணம்.

இதன் தொடர்ச்சியாக ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதுப்பொழிவுடன், புது அப்டேட்டுகளுடன் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி எஸ்.எல் 55 காரை இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக விலை எக்ஸ் ஷோ ரூம் ரூ.2.35 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.