அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – அமைச்சர் பொன்முடி

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளதனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்கதற்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் 2,40,000 வந்துள்ளது. 1,07,299 இடங்கள் உள்ளது. அதில் தற்போது வரை 80,084 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதனால், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% இடத்தை அதிகரித்துக்கொள்ளலாம்.

அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 15%, சுயநிதி கல்லூரிகளில் 10% இடங்களை அதிகரித்துக்கொள்ளலாம். சமூக நீதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரிவுரையாளர்கள் நியமனத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் வேறு கல்லூரிக்கு சென்றாலும் கட்டணம், சான்றிதழ்களை கல்லூரிகள் கொடுத்துவிட வேண்டும். திருச்சி பெரியார் கல்லூரி அங்கீகாரம் ரத்து என்பது தவறான தகவல். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.