வி.கே.சசிகலா உடனான சந்திப்பு விரைவில் நடக்கும் – ஓ.பன்னீர்செல்வம்

வி.கே.சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவருடன்…

வி.கே.சசிகலாவை விரைவில் சந்திக்க உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். அவருடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவி தினகரனை சந்தித்தார். சுமார் அரை மணி நேர சந்திப்புக்குப் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்போம் என கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று கேரள மாநிலம் கொச்சிக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவரிடம், சசிகலாவை சந்திப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓபிஎஸ் சின்னம்மா அவர்களை கூடிய விரைவில் சந்திப்பேன் என கூறினார். தொடர்ந்து அவரிடம் தமது குடும்ப நலனுக்காக யாரை வேண்டுமானாலும் ஓ.பி.எஸ் சந்திப்பார் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ஆர்.பி.உதயகுமாரின் கருத்துக்கு பதில் சொல்ல தேவையில்லை என்று தெரிவித்தார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.