அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அமைச்சரவையை மாற்றலாம் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது : “ஆளுநரை சந்திப்பதாக இருந்தால், சந்திப்பதாக சொல்லிவிட்டு போகப் போகிறேன். அமைச்சரவையில் மாற்றம் செய்வது குறித்து எனக்கு தெரியாது. முதலமைச்சர் தனக்கு கீழ் பணியாற்றுகிறவர்களை மாற்றலாம், எடுக்கலாம், புதிய அமைச்சர்களை நியமிக்கலாம். அது முதலமைச்சரின் உரிமை. உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அதுதான் எனக்கும் தெரியும்.
அமைச்சரவை மாற்றத்தில் என் பெயர் இருந்தால், இருக்கட்டும். நான் துணை முதலமைச்சர் ஆகப்போவதாக சொல்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுமா என்பதே தெரியாது. அப்படி இருக்கும்போது நான் எப்படி ஆளுநரை சந்திக்க முடியும்? நாளை மறுநாள் பதவி ஏற்பு நிகழ்வு இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி இருந்தால் போவோம்.
ஒரு நாள் சென்னையில் இல்லை என்றாலே பாதியுலகம் தெரிவதில்லை. திராவிட மாடல் காலாவதியாகவில்லை. ஆளுநர் பேச்சு தான் காலாவதியாகிவிட்டது. அமைச்சரவை மாற்றம் குறித்து முடிவெடுக்க வேண்டியவர் முதலமைச்சர். உங்கள் யூகங்கள் சரியாக இருந்தால், ஆளுநரை சந்திப்போம். காலில் வலி ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் வீட்டில் இருப்பதாகவும் முதலமைச்சர் கூறினார்.
இதையும் படியுங்கள் : பிரபாஸின் ’ஆதிபுருஷ்’ பட ட்ரெய்லர் வெளியானது…!
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏதாவது ஸ்டண்ட் அடித்துக்கொண்டே இருப்பார். ஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன், சிபிஐ – சிபிஎம் மாதிரி என்கிறார்கள். அவ்வாறு இருந்தால் நல்லதுதான்”. இவ்வாறு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்த வீடியோவை காண :







