பிரபாஸ் நடிப்பில், ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரபாஸின் ஆதிபுருஷ், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும் ஆதிபுருஷ் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவலாகும். இத்திரைப்படத்தில் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆதிபுருஷ், தமிழ், கன்னடம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களாக இப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கடந்த 6 ஆம் தேது வெளியானது. படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட படக்குழு மே 9 ஆம் தேதி ஆதிபுருஷ் ட்ரெய்லரும், ஜூன் 16 ஆம் தேதி திரைப்படமும் வெளியாகும் என்று அறிவித்திருந்தது.
இதையும் படியுங்கள் : ”மாணவி நந்தினிக்கு தங்கப் பேனாவை பரிசளிக்கிறேன்”- கவிஞர் வைரமுத்து ட்வீட்
அதன்படி இன்று ஆதிபுருஷ் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அசத்தலான கிராஃபிக்ஸ் காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான அரை மணி நேரத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை ஆதிபுருஷ் ட்ரெய்லர் பெற்றுள்ளது.