மதிமுக மாவட்ட செயலாளர் போர்கொடி-துரை வைகோ விளக்கம்

மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்…

மதிமுகவை கலைத்துவிட்டு, திமுகவுடன் இணைத்துவிடலாம் என சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் கூறியதற்கு, சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் அவர் காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சிவகங்கை கோகுலேஹால் தெருவில் மதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மதிமுக செயலாளர் செங்குட்டுவன் மற்றும் விருதுநகர் செயலாளர் சண்முக சுந்தரம் உட்பட பல மூத்த நிர்வாகிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, மதிமுகவில் நடைபெறவுள்ள உட்கட்சி தேர்தல், கட்சி விதிகளின்படி நடைபெறவில்லை என்று குற்றஞ்சாட்டினர். கட்சியின் தலைமை பொறுப்பை துரை வைகோவுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர்கள், கட்சியை கலைத்துவிட்டு திமுகவில் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

அப்போது அங்கு கூடிய மற்றொரு பிரிவு மதிமுகவினர், கட்சி அலுவலகத்தில் இருந்து செவந்தியப்பன் உள்ளிட்டோர் வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுதது பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மதிமுக தலைமை கழக செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டதற்கு, அக்கட்சியின் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன் எதிர்ப்பு தெரிவித்தது குறித்து, நியூஸ் 7 தமிழுக்கு துரைவைகோ விளக்கம் அளித்தார். சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் பேசிய அவர், சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் செவந்தியப்பன், தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டினார். கட்சியின் சட்ட விதிப்படிதான் தலைமை கழக செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது என்றும், கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடுதான் தலைமை கழக செயலாளராக தான் தேர்வாகியுள்ளதாகவும் தெரிவித்த துரை வைகோ, தனது தேர்வு தொடர்பாக அதிருப்தி இருந்தால் மதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதனை தெரிவிக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு வழங்காததால் சிவகங்கை மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், காழ்ப்புணர்வோடு செயல்படுவதாக மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.