தாலிக்கு தங்கம் – முதலமைச்சர் விளக்கம்

கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல்…

கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே, தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிலாக, அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துவிட்டு மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும், படிப்பு முடியும்வரை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்பட்டதற்கு சட்டப்பேரவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தாலிக்கு தங்கம் திட்டம் எனப்படும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம், 1989ம் ஆண்டு, திமுக ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினார். இந்த திட்டத்திற்காக அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட மனுக்களை ஆய்வு செய்தபோது 24 சதவீத மனுக்களே தகுதியானவை என கண்டறியப்பட்டதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த திட்ட முறைகேடு தொடர்பாக 43 வழக்குகள் போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர், திருமண திட்டத்தை கொச்சைப்படுத்த விரும்பவில்லை என்றும், கல்வியே நிரந்தர சொத்து என்பதற்காகவே தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். கல்வி என்ற நிரந்தர சொத்தை வழங்க வேண்டும் என்பதற்காகவே திட்டம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த மு.க. ஸ்டாலின், இந்த திட்டத்தின் மூலம், ஆறு இலட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.