ஓசூர் ஸ்ரீ கல்யாணச் சூடேஸ்வரர் ஸ்ரீ மரகதாம்பிகைத் திருக்கல்யாண வைபவம், வெகு விமர்சையாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ளப் பழமை வாய்ந்தப் பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திரச் சூடேஸ்வரர் திருக்கோயில் கடந்த 1ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய மாசி மாத உற்சவமானதுத் தொடர்ந்துச் சுவாமிக்கு பல்வேறுச் சிறப்பு வழிபாடுகளுடன் கூடியப் பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இன்றுத் திருத்தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னதாகத் திருக்கோயிலின் மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகளான ஸ்ரீ மரகதாம்பிகை மற்றும் ஸ்ரீ கல்யாண சூடேஸ்வர சுவாமிகளுக்கு வேத விற்பன்னர்களின் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு திரவியங்களைக் கொண்டு ருத்ரா அபிஷேகம் நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கும், அம்பாளுக்கும் திருமாங்கல்யத்தை அணிவித்துத் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பின்னர், சுவாமி அம்மையப்பராகச் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்து அருள் பாலித்தார். இதில் ஏராளமானப் பக்தர்கள் கலந்துக் கொண்டுச் சுவாமித் தரிசனம் செய்தனர்.