கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில்
காபி, பலாப்பழம் விளைச்சல் துவங்கி உள்ளது. இந்த பழங்களை உண்பதற்காக, காட்டு
யானைகள் சமவெளிப் பகுதியிலிருந்து, மலைக்கிராமப் பகுதிகளுக்கு வந்து செல்வது
வழக்கம். அவ்வாறு வரும் யானைகளில் சில, வழித்தவறி கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்துகிறது. மேலும், மனிதர்களை தாக்கும் செயல்களில் ஈடுபடுகின்றன.
இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை ஒன்று , குஞ்சபானை பகுதியில் இருந்து தேயிலைத் தோட்டம் வழியாக முள்ளூர் கிராமப் பகுதிக்கு வந்தது. மேலும், திரும்பி வனப் பகுதிக்குச் செல்லாமல் தேயிலைத் தோட்டத்திற்குள் உலா வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், வழக்கம்போல் இன்று தேயிலைகளை பறிக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தன. தேயிலை தோட்டத்தில் திடீரென உலா வந்த ஒற்றை காட்டு யானையை கண்டு அச்சமடைந்து பாதியிலேயே வீடு திரும்பினர். தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையை, வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.