முக்கியச் செய்திகள் இந்தியா தேர்தல் 2021

கருத்துக் கணிப்பு முடிவுகள்: மேற்கு வங்கத்தில் வெற்றி வாய்ப்பு எந்த கட்சிக்கு அதிகம்?

மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்கத்தில் 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எட்டுக் கட்டங்களாக நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 158 இடங்கள் வரை கைப்பற்றி ஆட்சியை தக்கவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி 115 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், இடதுசாரிகள் 19 இடங்களில் வெல்லக் கூடும் என்றும் டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளது.

இதேபோல், பி- மார்க் நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும், மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 158 இடங்களில் கைப்பற்றி மமதா பானர்ஜி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும் எனக் கூறப்பட்டுள்ளது. 120 இடங்களை பாஜக கூட்டணியும், 14 இடங்களில் இடதுசாரிகளும் வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், மேற்குவங்க மாநிலத்தில் 143 இடங்களை கைப்பற்றி பாஜக முன்னிலை பெறும் என்று ரிபப்ளிக் தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் 133 தொகுதிகளிலும், இடதுசாரிகள் 16 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என ரிபப்ளிக் தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

இந்தியா டுடே நிறுவனம் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 147 இடங்களில் கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணமுல் காங்கிரஸ் 143 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இடதுசாரிகள் இரண்டு இடங்களில் வெற்றி பெறுவார்கள் என்றும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!

Halley karthi

காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம்!

Gayathri Venkatesan

நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த நீதிபதியின் பின்னணி

Saravana Kumar