கொரோனா வைரஸ் மட்டும் கையில் கிடைத்தால் அதனை மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன் என சிவ சேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசை குணப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்தைப் பதுக்கியதாக எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முன்னதாக மகாராஷ்டிராவில் கொரோனா வைரசை குணப்படுத்தும் ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் குறித்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்திய அரசு ரெம்டெசிவர் மருந்தை ஏற்றுமதி செய்யத் தடைவிதித்துள்ளது. இதனையடுத்து மருந்தை ஏற்றுமதி செய்ய இருந்த நிறுவன உரிமையாளரைக் காவல் துறையினர் கைது செய்தனர். இதனையெடுத்து கைது செய்யப்பட்ட மருந்து நிறுவன உரிமையாளரை விடுதலை செய்ய கோரி பாஜக மூத்த தலைவரும் மாகராஷ்டிரா எதிர்க்கட்சி தலைவர் தேவந்திர பட்னாவிஸ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன்காரணமாக ரெம்டெசிவர் மருந்தை பதுக்கியதாக தேவந்திர பட்னாவிஸ் மீது சிவ சேனா கட்சியினர் குற்றச்சாட்டை எழுப்பினர். இந்நிலையில் சிவசேனாவின் புல்தானா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில், “மகாராஷ்டிரா முதல்வராகத் தேவேந்திர பட்னாவிஸ் தற்போது இருந்திருந்தால் கொரோனா நோய் பரவலை தடுக்க என்ன செய்திருப்பார்? தற்போது சிவ சேனா அரசுடன் இணைந்து கொரோனா பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளாமல் ஆளும் அரசியல் கட்சியைக் கிண்டலும், கேலியும் செய்துகொண்டிருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநில மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படு உயிரிழந்து வரும் நிலையில், மாநில பாஜக அலுலவகத்தில் இருந்து குஜராத்திற்கு 50,000 ரெம்டெசிவர் மருந்துகள் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளது. இது எந்த விதத்தில் நியாயம். இப்போது என் கண்ணெதிரே கொரோனா வைரஸ் மட்டும் தெரிந்தால் நான் அதை பட்னாவிஸ் வாய்க்குள் திணித்துவிடுவேன்” என சர்ச்சையாக கருத்தைத் தெரிவித்துள்ளார்.