முக்கியச் செய்திகள் சினிமா

’உனக்கான இரங்கல் பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்’: கே.வி ஆனந்த் மரணம்- வைரமுத்து இரங்கல்

இயக்குநர் கே.வி ஆனந்த் மரணத்திற்குக் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோ, அயன், மாற்றான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி. ஆனந்த். 1995ஆம் ஆண்டில் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை இவர் பெற்றார். 2008ஆம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்திற்காகச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருதையும் கே.வி. ஆனந்த் பெற்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 3மணியளவில் மாரடைப்பால் மரணடைந்தார். இந்நிலையில் இவரது மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜா, நடிகை குஷ்பூ, கவிஞர் வைரமுத்து ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று அவரது ட்விட்டர் பக்கத்தில் கே.வி. ஆனந்த் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ‘வருந்துகிறேன் நண்பா! திரையில்
ஒளிகொண்டு சிலை செதுக்கினாய்! வாஜி வாஜி பாடலைராஜ கவிதையாய் வடித்தெடுத்தாய்! என்எத்தனையோ பாடல்களை ரத்தினமாய் மாற்றினாய்!
இதோ உனக்கான இரங்கல் பாட்டை எங்ஙனம் படம் செய்வாய்?” இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.

Advertisement:

Related posts

ஒட்டிப்பிறந்த அரிதான இரட்டை குழந்தைகள்

Karthick

முஸ்லீம் லீக், மமகவுடன் திமுக இன்று தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை!

Ezhilarasan

”முதல் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக்கொள்வேன்”- அமைச்சர் பாண்டியராஜன்!

Jayapriya