மகாராஷ்டிராவில் கொரோனாவை கையாள்வதில் குறைபாடுகள் உள்ளது – மத்தியக் குழு

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு…

மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தொற்றைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்த மாநிலங்களில் உள்ள நிலவரங்களை ஆராய மத்தியக் குழு அனுப்பப்பட்டது. அதன்படி மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த வாரத்தின் தொடக்கத்தில் மத்தியக் குழு ஆய்வு மேற்கொண்டது. அதில், மகாராஷ்டிராவில் 30 மாவட்டங்கள், சத்தீஸ்கர் மாநிலத்தில் 11 மாவட்டங்கள், பஞ்சாப் மாநிலத்தில் 9 மாநிலங்களிலும் மத்தியக் குழு ஆய்வு செய்த து.

இந்த மூன்று மாநிலங்களிலும் கொரோனா சூழலை கையாள்வதில் பல குறைபாடுகள் நிலவியதாக மத்திய அரசு கூறி உள்ளது. இப்போது இருக்கக் கூடிய சுகாதார வசதிகளை போதுமான வகையில் மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் மத்தியக் குழு குற்றம்சாட்டியுள்ளது.

அதே போல ஆர்டிபிசிஆர் சோதனை வசதிகளை போதுமான அளவு பயன்படுத்தவில்லை. அதுதவிர, சுகாதாரத்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லை என்றும் மத்தியக் குழு கூறி உள்ளது. மூன்று மாநிலங்களில் கோவிட்19- பொருத்தமான நடத்தைக்குக்கு ஏற்ப இணக்கமாக செயல்படவில்லை என்றும் மத்தியக் குழு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.