சென்னை திருமுல்லைவாயல் அருகே தண்ணீர் என நினைத்து பாட்டிலில் இருந்த அமிலத்தை குடித்த மூதாட்டி பலியானார்.
சென்னை அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த செல்வத்தின் தாயார் மேனகா, தனது மகனுடன் வசித்து வந்தார். அவருக்கு வயது மூப்பு காரணமாக கண் பார்வை குறைபாடு இருந்தது.
நேற்று சாப்பிட்டுவிட்டு நீரிழிவு நோய்க்கான மாத்திரை போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் என நினைத்து குடித்துள்ளார். நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு உதவிக்காக அலறி துடித்துள்ளார். பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கே.எம்.சி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







