மும்முறை நீளம் தாண்டுதலில் புதிய சாதனை படைத்த மதுரை வீரர் – சர்வதேச போட்டியில் தங்கம் வென்று அசத்தல்!!

சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார். மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ்…

சர்வதேச தடகள போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் மதுரையை சேர்ந்த விளையாட்டு வீரர் செல்வ பிரபு திருமாறன் சாதனை படைத்துள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த விவசாயியான திருமாற என்பவரின் மகன் செல்வ பிரபு. கிரீஸ் நாட்டின் வெனிசெலியா நகரில் நடைபெற்ற கிராண்ட் பிக்ஸ் சர்வதேச போட்டியில், மும்முறை நீளம் தாண்டுதலில் ஆடவர் பிரிவில் 16.78 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

16 ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பீர்ந்தர் சிங் என்ற தடகள வீரர் மும்முறை நீளம் தாண்டுதலில் 16.63 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இந்நிலையில், 16.78 மீட்டர் நீளம் தாண்டியுள்ள மதுரையைச் சேர்ந்த செல்வா, ஹர்பீர்ந்தர் சிங்கின் சாதனையை முறியடித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 2020 வீழ்ச்சி, 2021 கோப்பை, 2022 வீழ்ச்சி, 2023…?? – கம்பேக் கொடுக்குமா தோனி & கோ??

செல்வ பிரபு திருமாறன், இந்த மும்முறை நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றதை அடுத்து, தாய்லாந்தில் ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் ஏசியன் அத்லட்டிக் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.