மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பேராசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள்,…

மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் பணியாற்ற பேராசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எய்ம்ஸ் கல்லூரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ENT, Anatomy, Biochemistry, General Surgery உள்ளிட்ட 21 துறைகளில் பணியாற்ற 94 பேராசிரியர்கள் தேவைப்படுகின்றனர். 20 பேராசிரியர்கள், 17 கூடுதல் பேராசிரியர்கள், 20 இணை பேராசிரியர்கள், 37 உதவி பேராசிரியர்கள் என்று 94 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப் பிரிவினர், OBC பிரிவினர், EWS பிரிவினர், பட்டியலினத்தவர் என்று இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன

விருப்பமும், தகுதியும் உடையவர்கள் வரும் ஜூலை 18ஆம் தேதிக்குள் http://www.jipmer.edu.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் பேராசிரியர்கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் எய்ம்ஸ் கல்லூரியில் பணியமர்த்தப்படுவார்கள். எய்ம்ஸ் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த பின், மதுரை வளாகத்துக்கு அனைவரும் மாற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.