மத்தியப் பிரதேசத்திலுள்ள பந்தவ்கர் தேசிய பூங்காவில் கடந்த இரண்டு நாட்களாக கடும் காட்டுத்தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.
இந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேசிய பூங்காவின் ஒன்றாகும் பந்தவ்கர் தேசிய பூங்கா நூறு சதுர கி.மீ. பரப்பளவைக்கொண்ட பூங்காவாகும். இது மத்தியப்பிரதேசத்திலுள்ள உமரியா மாவட்டத்தில் உள்ள விந்திய மலையில் அமைந்துள்ளது.
நாட்டின் சிறந்த வனவிலங்கான வங்க புலிகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பூங்காவில் கடந்த 2 நாட்களாக கடும் காட்டு தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது.

காட்டுத் தீயை அணைக்க வனத்துறை அதிகாரிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். ஆனால் தீ விபத்து ஏற்பட்டபோது அதிகாரிகள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். அதிகளவு மரங்களும் செடிகளும் புல்வெளிகளும் தீக்கு இரையாகியுள்ளது. காட்டு தீ காரணமாக இதுவரை எந்தவொரு வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பந்தவ்கர் தேசிய பூங்கா தீ விபத்தைப் பலரும் வீடியோ காட்சிகளாகவும் புகைப்படங்களாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தங்களுடைய வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.







