தான்சானியா அதிபர் ஜான் மகபுலியின் இறுதிச்சடங்கில் 45 பேர் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தான்சானியா நாட்டின் அதிபர் ஜான் மகபுலி உடல் நலக்குறைவால் கடந்த வாரம் காலமானார். இந்நிலையில் அவரின் உடலுக்கு மரியாதை செலுத்த பொது மக்கள் கூட்டம் அவர் வீட்டின் முன் திரண்டிருந்தது. மேலும் சிலர், அவருக்கு அஞ்சலி செலுத்த அவர் வீட்டின் சுவர்களை தாண்டி உள்ளே நுழைய முயன்றுள்ளனர். பின்னர், சுவரில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிப்பட்டு 45 பேருக்கும் மேற்பட்டோர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். இன்னும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து, அரசு மரியாதையுடன் முன்னாள் அதிபரின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைப்பெற்றது.







