முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம் செய்திகள்

யானைக்கு தீ வைத்த விவகாரம்: குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த விவகாரத்தில், குற்றவாளிகள் இரண்டு பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மாவனல்லா பகுதியில் காயத்துடன் ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இந்த யானை தனியார் தங்கும் விடுதிக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த அதன் உரிமையாளர் ரேமாண்ட்டீன் மற்றும் ஊழியர் பிரசாந்த் ஆகியோர் தீப்பந்தத்தை பற்ற வைத்து யானை மீது வீசினர்.

தீக்காயத்துடன் அலறியபடி வனப்பகுதிக்குள் ஓடிய காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து விடுதி உரிமையாளர் ரேமாண்ட்டீன் மற்றும் ஊழியர் பிரசாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் யானைக்கு தீ வைத்த இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

விவசாயம்தான் எனது பிரதான தொழில்: முதல்வர்!

Gayathri Venkatesan

அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை நிறுத்திக்கொண்ட ஐரோப்பிய நாடுகள்!

Karthick

தனித் தேர்வர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை!

Jeba