“தமிழகத்தில் தாமரை என்றும் மலராது”: ஸ்ரீநிதி சிதம்பரம்

தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக வெளியிட்டிருந்த வீடியோவுக்கு கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும்…

தமிழகத்தில் தாமரை மலரும் என பாஜக வெளியிட்டிருந்த வீடியோவுக்கு கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6ல் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று “தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்” என விடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில் ஒரு காட்சியில் செம்மொழியாம் தமிழ்மொழி என்கிற பாடலுக்கு நடனமாடியிருந்த சிவகங்கை தொகுதி எம்.பி., கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி சிதம்பரத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்த படத்தின் அருகே “தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை கண்ட ஸ்ரீநிதி அதை ஸ்கீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் தாமரை என்றும் மலராது” என கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வீடியோவை பாஜக நீக்கியது. ஆனாலும், தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த ஸ்கீன் ஷாட் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.