பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றவரின் பிறப்புறுப்பை வெட்டிய பெண்!

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் பிறப்பு உறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ஷித்தி மாவட்டத்தில் உள்ள ஹுமரிகா…

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான பெண், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஆணின் பிறப்பு உறுப்பை கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ஷித்தி மாவட்டத்தில் உள்ள ஹுமரிகா என்ற கிராமத்தில் பெண் ஒருவர் வீட்டில் நடு இரவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் பணியின் நிமித்தமாக வெளியூருக்குச் சென்றிருந்ததால், வீட்டில் அந்தப் பெண்ணும் அவரது 13 வயது மகனுடன் இருந்திருக்கிறார். திருடன் தான் வீட்டில், நுழைந்துவிட்டான் என்று முதலில் அந்த பெண் நினைத்திருக்கிறார். ஆனால் அந்த நபர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார். தன்னை காப்பாற்றிக்கொள்ள வெகு நேரம் அப்பெண் போராடி இருக்கிறார். இந்நிலையில் வேறு வழியின்றி படுக்கைக்கு அடியில் உள்ள கத்தியை எடுத்து அந்த பெண் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரின் பிறப்பு உறுப்பை வெடியுள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்நிலையத்திற்குச் சென்ற அப்பெண் மர்ம நபர் மீது புகார் கொடுத்ததின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிய மர்ம நபரைக் காப்பாற்றிச் ஷித்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கிருக்கும் மருத்துவர்களின் பரிந்துரையின்படி அவர் சஞ்சை காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.