இலவசம் என்ற பெயரில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களுக்கு பிச்சைபோடுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாத்திமாவை ஆதரித்து, மேலப்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் வாங்குவது வரை அனைத்திலும் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக சாடினார். இலவசம் என்ற பெயரில், இங்கு பிச்சையிடப்படுவதாகவும், நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதே, நகைகளை அடகு வைக்கும் நிலைக்கு தள்ளியது யார் என்றும் சீமான் கேள்வி எழுப்பினார். ஆட்சியை கைப்பற்றாமல் தனது கனவை நிறைவேற்ற முடியாது என குறிப்பிட்ட அவர், அதனாலேயே நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.







