கொரோனாவின் மூன்றாம் அலையில் சிக்கிய பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 25,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் செவ்வாய் கிழமையன்று தன் நாடு கொரோனாவின் மூண்றாம் அலையில் சிக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார். நேற்றைய தினம்…

பிரான்ஸ் நாட்டில் கடந்த ஏழு நாட்களில் 25,000 மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டின் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் செவ்வாய் கிழமையன்று தன் நாடு கொரோனாவின் மூண்றாம் அலையில் சிக்கியுள்ளது என்று அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டுமே பிரான்ஸில் 29,975 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெறிவித்துள்ளனர். மேலும், “கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவிடும். எனவே, முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்” என்று சுகாதாரத்துறை அமைச்சர்கள் தெறிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி மூலமாக மூன்றாம் அலை பாதிப்பைத் தடுத்துவிடலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மாக்ரோன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுவரை பிரான்ஸ் நாட்டில் 44 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொரோனா பாதிப்பில் பிரான்ஸ் ஆறாவது இடத்தில் உள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் ஏழாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.