பவானி அருகே செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்த பெண் கைது!

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக…

பவானி அருகே உள்ள காட்டூரில், செல்போன் பயன்படுத்தி ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த மயிலம்பாடி காட்டூரில் செல்போன் மூலம் லாட்டரி விற்பனை செய்வதாக பவானி போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த பெண்ணை விசாரித்தனர். மேலும் அப்பெண்ணின் செல்போனை ஆய்வு செய்த போது செல்போன் மூலம் லாட்டரிக்கு எண் அனுப்பியது தெரிய வந்தது.

பின்னர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்ததில், அவர் காட்டூரை சேர்ந்த சந்தியா என்பது தெரிய வந்தது. மேலும் அவர் செல்போனில் லாட்டரி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில்,  சந்தியாவை போலீசார் கைது செய்தனர்.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.