கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த ராதிகா என்ற பெண் சொத்துப் பிரச்சினை காரணமாக தனது நிலத்தில் விளையும் முன்னே வாழைத்தார்களை எடுத்துச் செல்லும் கொழுந்தன் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி ராதிகா குமாரி. இவர்களது குடும்பத்தினருக்கும் ராஜனின் தம்பி வின்செண்ட் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராதிகா தனது நிலத்தில் பயிரிட்ட வாழைத்தார்கள் விளையும் முன்னரே வின்செண்ட் வெட்டி எடுத்து சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராதிகா பலமுறை கருங்கல் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ராதிகா நேற்று காலையில் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேந்தன்







