மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாமகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் கடலூர் தொகுதியில் பிரபல திரைப்பட இயக்குநர் தங்கப்பச்சான் போட்டியிடுகிறார்.
நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்து 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களவைத் தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை பாமக இன்று அறிவித்துள்ளார்.
பாமக முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல்:
- திண்டுக்கல் – ம.திலகபாமா
- அரக்கோணம் – வழக்கறிஞர் கே.பாலு
- ஆரணி – கணேஷ்குமார்
- கடலூர் – தங்கர் பச்சான்
- மயிலாடுதுறை – ம.க.ஸ்டாலின்
- கள்ளக்குறிச்சி – தேவதாஸ் உடையார்
- தருமபுரி – அரசாங்கம்
- சேலம் – அண்ணாதுரை
- விழுப்புரம் – முரளி சங்கர்







