மக்களவைத் தேர்தல் 2024 | இன்று வெளியாகிறது தேமுதிக வேட்பாளர் பட்டியல்!

தேமுதிக-வின் வேட்பாளர் பட்டியலை  இன்று  நண்பகல் 12.30 மணி அளவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம்…

தேமுதிக-வின் வேட்பாளர் பட்டியலை  இன்று  நண்பகல் 12.30 மணி அளவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது.  இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது.  இதே போல்,  அதிமுகவும் 2 கட்டங்களாக 33 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மேலும்,  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக-விற்கு திருவள்ளூர் (தனி), கடலூர்,  மத்திய சென்னை,  விருதுநகர்,  தஞ்சாவூர் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  அந்த 5 தொகுதிகளுக்கு 19.03.24 மற்றும் 20.03.24 என இரண்டு நாட்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகிக்கப்பட்டது.

அந்த இரண்டு நாட்களில் மொத்தம் 60-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டுத் திரும்பப் பெறப்பட்டது.  விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேர்தல் குழுவினர் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற நேர்காணல் அடிப்படையில் எந்த தொகுதியில், எந்த வேட்பாளருக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெற முடியும் என்ற நோக்கத்தில் 5 வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  அதன் தொடர்ச்சியாக இன்று அந்த 5 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை மதியம் 12:30 மணி அளவில் தேமுதிக தலைமை கழகம் அறிவிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.