ரமலானில் புனித உம்ரா பயணம் மேற்கொண்ட நடிகர் அலிகோனி!

பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் அலிகோனி மெக்காவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும்…

பிரபல இந்தி சின்னத்திரை நடிகர் அலிகோனி மெக்காவிற்கு புனித உம்ரா பயணம் மேற்கொண்டதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்த ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் புனித இடமான மெக்கா,  மதினாவிற்கு உம்ரா  செல்கின்றனர்.

அந்த வகையில்,  நடிகர் அலிகோனி சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவிற்கு  உம்ரா சென்றுள்ளார்.  அவரின் பயண அனுபவத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது;

“அல்ஹம்துலில்லாஹ்,  “ரமலானில் உம்ரா செய்வது என்னுடன் ஹஜ் செய்ததற்கு சமம்” என்று நபிகள் கூறினார்கள்” அல்லா ஹம் சப் கோ யே மௌகா டி அமீன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;

கடந்த முறையும்,  நான் மெக்காவிற்கு வந்தேன்.  அதுதான் நான் முதல்முறை இங்கு வந்தது. ரமலானில் உம்ரா செய்தால் என்னுடன் சேர்ந்து ஹஜ் செய்வது போன்றது என நபிகள் நாயகம் கூறினார்கள்.  இது மிகவும் முக்கியமானது.  பல நாடுகளில் இருந்தும் பலர் வருகின்றனர்.  இது முற்றிலும் ஒரு வித்தியாசமான அனுபவம்.  சிறு வயதிலிருந்தே பலர் அங்கு செல்ல வேண்டும் என கனவு காண்கின்றனர்.  அங்கு சென்றதும் ஒரு புது சக்தியை உணர்வீர்கள்.  உங்களை நன்றாக உணர வைக்க ஒரு சக்தி இருக்கிறது.

அடுத்த வருடம் மீண்டும் என் அப்பா,  அம்மாவுடன் செல்ல திட்டமிட்டுள்ளேன். ஒ வ்வொரு வருடமும் அங்கு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளேன்.  இன்ஷா அல்லாஹ்!” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.