“ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும்” – குஜராத்தில் வாக்களித்த பின் பிரதமர் மோடி பேச்சு!

ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத்,  கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று…

ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும் என் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தலையொட்டி, குஜராத்,  கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று (மே 7) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி.  அதன் பின், செய்தியாளர்களுடன் பேசிய அவர், “உலகின் ஜனநாயக நாடுகளுக்கு உதாரணமக திகழ்கிறது இந்தியாவின் தேர்தல் நடைமுறை.  சுமார் 64 நாடுகளில் தேர்தல் நடைமுறை உள்ளது.

அவையனைத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.  ஜனநாயகத்தை கொண்டாடுவதை போல அமைந்துள்ளது இந்த ஆண்டு.  நாட்டு மக்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து வாக்கு செலுத்த வேண்டும்.  ஜனநாயகத் திருவிழாவை கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.