800 கிலோ நகைகளுடன் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து!

சித்தோடு அருகே 800 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  கோவை கொடிசியா பகுதியில் இருந்து சேலத்திற்கு தனியார் ஏஜென்சி மூலம் 800 கிலோ தங்க நகைகள் வேனில் எடுத்துச்…

சித்தோடு அருகே 800 கிலோ தங்க நகைகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

கோவை கொடிசியா பகுதியில் இருந்து சேலத்திற்கு தனியார் ஏஜென்சி மூலம் 800 கிலோ தங்க நகைகள் வேனில் எடுத்துச் செல்லப்பட்டது.  இந்த நிலையில்,  ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த சமத்துவபுரம் மேடு பகுதி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  இந்த விபத்து இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்ததாக தெரிகிறது.

இந்த விபத்தில் வேனை ஓட்டி சென்ற சிவக்குமார் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.  இதனை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீசார் விபத்துக்குள்ளான வேனை மீட்டனர்.  மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.