#IPL2026 | பெங்களூரு – லக்னோ இன்று மோதல்!

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு பெங்களூரு, லக்னோ அணிகள் போட்டி நடைபெற உள்ளது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, லக்னோ அணிகள் மோத உள்ளன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு, லக்னோ அணிகள் போட்டி நடைபெற உள்ளது.

ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3ல் வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ அணி இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.