அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரின் வேதாந்தா அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில், சிங்கி தராய் பகுதியில் உள்ள வேதாந்தா அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்தவுடன் அங்கிருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஓடியதால், நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் விபத்துக்கான சரியான காரணத்தை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. பிற்பகல் 2 மணிக்கு விபத்து ஏற்பட்ட போது அனைத்து தொழிலாளர்களும் ஆலைக்குள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என கூறப்படுகிறது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.