GOLD RATE | தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

இதனிடையே நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,220-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,320-க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,14,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போல வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.