இந்தியா தற்போது கொரோனா தொற்று நோயால் மோசமான பின்னடைவுகளை சந்தித்து வருகிறது, இதன் காரணமாக ஊரடங்கு முறையை கடைபிடித்து வருகிறோமா என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசீலனை செய்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக ஒவ்வொரு மாநிலமும் ஊரடங்கு அறிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவில் கன மழை பெய்து வரும் நிலையில் டொமினோஸ் பிட்சா ஊழியரின் செயல் இணைதளத்தில் அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.இந்த லாக்டவுன் காலகட்டத்தில் மக்கள் வெளியே செல்வதும், உணவகங்களுக்கு செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு வீடு தேடி வருவது பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. உணவகங்கள் இந்த நிலையிலும் மக்களின் உணவுத்தேவைகளை உணவின் தரம் மற்றும் சுவை குறையாமல் வழங்கிவருவது மிகவும் பாராட்டுதற்குரியது.
இவ்வாறு இருக்கையில் டொமினோஸ் தங்களுடைய ட்விட்டர் பக்கத்கில் தங்களின் ஊழியர் வாடிக்கையாளர் ஒருவருக்கு பீட்சாவை கொடுப்பதற்கு முட்டியளவுக்கு மேல் உள்ள தண்ணீரில் கடும்மழை வெள்ளத்தை பொருட்படுத்தாது பீட்சா பேக்குடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை அந்நிறுவனம் பகிர்ந்து பாராட்டியுள்ளனர். இந்த பதிவு ட்விட்டரில் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.







