முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைவு?

டெல்லியில் கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் கொரோனா பாதிப்பு தற்போது மிகவும் குறைந்து வருவதாக தெரிவித்தார். கொரோனா பாதிப்பு விகிதம் 11 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார் டெல்லியில் மாவட்டம்தோறும் ஆக்சிஜன் வங்கிகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

மேலும், கொரோனாவுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறும் நபர்களுக்கு, ஆக்சிஜன் தேவைப்படும் பட்சத்தில் 2 மணி நேரத்தில் வீட்டுக்கே வந்து ஆக்சிஜனை கொடுக்க, 1031 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

Advertisement:

Related posts

புதையலைத் தேடும் நாயகன்: 3 பாகங்களாக உருவாகும் ’கொற்றவை’

Karthick

நாய்களின் இருப்பிடமாக மாறிய உ.பி அரசு மருத்துவமனை: மெத்தையில் உல்லாச உறக்கம்!

Saravana

பட்டியலின மக்களின் பழுதடைந்த வீடுகள் சரி செய்து தரப்படும்: முதல்வர்!

Saravana Kumar