தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக, 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது.
தமிழகத்தில், கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக, ஞாயிற்றுக் கிழமைகளில், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 7 மாதங்களுக்குப் பிறகு, முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கு காரணமாக, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகத்தில், தேவையின்றி வெளியே நடமாடுபவர்களை கண்காணிப்பதற்காக கூடுதலாக போலீசார் பதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் உரிய ஆவணத்தை காண்பித்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.







