செய்திகள்

முதல்வர் நிவாரண நிதி: ரூ.10 லட்சம் வழங்கிய ஜி.கே.வாசன்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை ஜி.கே.வாசன் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு துணை நிற்கும் வகையில் 10 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கியதாகத் தெரிவித்தார்.

புதிய ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எடுத்து வரும் நடவடிக்கையால், பெருந்தோற்று தமிழகத்தில் குறைய வாய்ப்பிருப்பதாக நம்புவதாகவும் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை நூறு சதவீதம் மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர், தடுப்பூசி, மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் போன்றவற்றை தமிழகத்துக்கு மத்திய அரசு தடையின்றி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Advertisement:

Related posts

மக்கள் பிரச்னை 48 மணிநேரத்தில் தீர்க்கப்படும் – மகேந்திரன்

Gayathri Venkatesan

இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்!

Niruban Chakkaaravarthi

அசாமில் யானைகளுக்கு நடந்த துயரம்!

Karthick