ஏலியன்கள் உண்மையில் உள்ளதா..? இல்லையா…? என்பது மில்லியன் டாலர் கேள்விகளில் ஒன்றாகும். இந்த பிரபஞ்சத்தில் பூமியை தவிற வேறு எங்காவது உயிர்கள் இருக்கின்றனவா…? என்று மனித சமூகம் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. ஆனாலும் இந்த விஷயத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இன்னும் எந்த வித ஆதாராங்களும் வெளியாக வில்லை. இருந்தாலும் தொடர்ந்து ஏலியன்கள் இருப்பதாகவும் மக்கள் சிலரால் நம்பப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆய்வாளா்கள் ஏலியன்களை பிடித்து ‘ஏரியா 51’ என்ற ரகசியமான இடத்தில் வைத்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இது குறித்து அமெரிக்கா எந்த விவரத்தையும் உறுதிப்படுத்தவில்லை.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, “ஏலியன்கள் உண்மைதான்.. ஆனால் நான் அவற்றைப் பார்க்கவில்லை! மேலும் அவை ஏரியா 51ல் வைத்திருக்கப்படவில்லை” என்றார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏலியன்கள் தொடர்பாக அமெரிக்கா தரப்பில் உள்ள ரகசிய கோப்புகளை வெளியிடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது டிரூத் சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில்
“மக்களிடையே எழுந்துள்ள அபரிமிதமான ஆர்வத்தின் காரணமாக, வேற்றுகிரகவாசிகள் மற்றும் அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள் (UAP), அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள்கள் (UFOs) மற்றும் இது தொடர்புடைய அனைத்து ரசசிய கோப்புகளையும் அடையாளம் கண்டு வெளியிடுமாறு உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.







