முக்கியச் செய்திகள் தமிழகம்

சானிடைசர் பெயரில் சாராய விற்பனை ; 7 பேர் கைது

ஊத்துக்குளியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோத சாராய விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் முத்தம்பாளையம் கிராமம் முண்டூர் காவலை தோட்டம் பகுதியில் ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் தாராபுரம் மதுவிலக்கு காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர் . அப்போது அப்பகுதியில் சானிடைசர் என்ற பெயரில் சட்ட விரோதமாக விற்பனை செய்ய சாராயம் வைத்திருந்தது தெரியவந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட குணசேகரன், விஜய், விக்னேஷ், சதீஷ், ஜெயராஜ், சுலைமான் மற்றும் மனோஜ் ஆகிய ஏழு பேரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1750 லிட்டர் சாராயம், சாராய விற்பனைக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் மற்றும் இரண்டு சொகுசு கார்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் மதுவிலக்குப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

– ஜெனி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

31-ஆம் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட தடை: டிஜிபி சைலேந்திர பாபு

Arivazhagan Chinnasamy

100 ஆண்டுகளை கடந்தாலும் ஜெயலலிதாவின் திட்டங்களை யாராலும் அசைக்க முடியாது

Arivazhagan Chinnasamy

தீபத் திருநாளாம் தீபாவளி; ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து

Halley Karthik