சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய
போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கேரளா, ஆந்திரபிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு உட்பட
பல்வேறு மாநிலங்களில் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சார்பில் பாப்புலர் ஃப்ரண்ட்
ஆஃப் இந்தியா அமைப்பிற்கு தொடர்புடைய அனைத்து இடங்களிலும் தீவிர சோதனை
மேற்கொண்டனர். இந்த சோதனையானது தீவிரவாத அமைப்பிற்கு நிதி திரட்டுவது தொடர்பாக கிடைக்கப் பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் தகவலின் அடிப்படையிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தமிழ்நாட்டிலும் 10 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சோதனையின் முடிவில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட அனைவரும் விசாரணைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சோதனை தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் வலுவான
எதிர்ப்பு வலுத்து வந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் அமைந்துள்ள தேசிய
புலனாய்வு முகமை அலுவலகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
அளிக்கப்பட்டுள்ளது.
இதே போல் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம், சிந்தாரிப்பேட்டையில் உள்ள
இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்பின் அலுவலகத்திற்கு போலீசார் பாதுகாப்பு
போடப்பட்டுள்ளது.








