#IPL2026 | ராஜஸ்தான் – ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!

ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ராஜஸ்தான் – ஐதராபாத் இடையிலான போட்டி நடைபெற உள்ளது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஹைதராபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஹைதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் தோற்றது. அடுத்த ஆட்டத்தில் 65 ரன் வித்தியா சத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. அதன் பிறகு 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடமும் பணிந்தது.

ராஜஸ்தான் அணி தனது முதல் 4 ஆட்டங்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையையும், 6 ரன் வித்தியாசத்தில் குஜராத்தையும், 27 ரன் வித்தியாசத்தில் மும்பையையும், 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூவையும் வரிசையாக வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஹைதராபாத் 12 ஆட்டங்களிலும், ராஜஸ்தான் 9 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.